கொற்றாலை ஆற்றின் குறுக்கே அணைக்கட்டும் முடிவை ஆந்திர அரசு கைவிட வேண்டும் என்ற முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் கொற்றலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கு ஆந்திரா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இந்த கடிதத்தில் ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டுவதற்கு ஆந்திரா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் குடிநீர் வழங்கலைப் பாதிக்கும் என்பதை கருத்தில் கொண்டு, இவ்வாறு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசினை கலந்து ஆலோசிக்காமல் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்தி கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே இரு அணைகளை கட்டும் முயற்சியை ஆந்திர அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி மாண்புமிகு ஆந்திர முதலமைச்சர் @ysjagan அவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள் கடிதம் எழுதியுள்ளார். pic.twitter.com/FKNxNtskXW
— CMOTamilNadu (@CMOTamilnadu) August 13, 2022