Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“கோர்ட் உத்தரவை மீறி செயல்பட்ட கிராம மக்கள்”… காளியம்மன் கோவிலுக்கு சீல்….!!!!!

காட்டுப்புதூர் அருகே காளியம்மன் கோவிலுக்கு சீல் வைக்கப்பட்டது.

திருச்சி மாவட்டத்திலுள்ள காட்டுப்புதூர் அருகே இருக்கும் உன்னியூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் இருக்கின்றது. இக்கோவிலில் 8 வருடங்களுக்குப் பிறகு நேற்று தேர் திருவிழா நடந்தது. இந்நிலையில் இந்த கோவில் தேரை தனி நபரின் இடம் வழியாக தூக்கிச் சொல்வோம் எனக் கூறி மூங்கில் பட்டி, நாகப்ப முதலிபுதூர் ஊர் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதையடுத்து தகவல் அறிந்து வந்த போலீசார், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபோது நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படக் கூடாது என எடுத்துரைத்தார்கள்.

அப்பொழுது நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம். ஆதலால் உரிய முறைப்படி தேரை சிறிது தூரம் எடுத்துச் சென்று வழிபாடு நடத்தி கோவிலுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்தார்கள். ஆனால் தனி நபரின் நிலத்தின் வழியாக தேரை கொண்டு செல்ல முயற்சித்து கம்பி வேலிகளை அகற்றினார்கள். இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டதில் உடன்பாடு ஏற்படாததால் தேரில் இருக்கும் உற்சவர் சிலையை மீட்டு கோவிலுக்கு எடுத்துச் செல்ல மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதன் பேரில் போலீசார் தேரில் இருந்து உற்சவர் சிலையை மீட்டு கோவிலுக்கு கொண்டு வந்து பின் கோவில் கதவை பூட்டி சீல் வைத்தார்கள். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |