Categories
மாநில செய்திகள்

எனக்கு ஜூஸ் கொடுத்தார்….. “வங்கியில் கொள்ளை நடந்தது எப்படி?”…. காவலாளி விளக்கம்..!!

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியின் நகைக்கடன் பிரிவில் ஊழியரே கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள ஃபெட் வங்கியில் 20 கோடி மதிப்பிலான நகைகளை 3 பேர் இன்று  கொள்ளையடித்து சென்றுள்ளனர்.. இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து விசாரணை நடத்தியதில் அந்த வங்கியில் வேலை செய்யும் ஊழியரான மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்த முருகன் தான் அவருடைய கூட்டாளியுடன் வந்து துப்பாக்கி முனையில் மேலாளர் சுரேஷ் மற்றும் வாட்ச்மேனுக்கு மயக்க மருந்து கொடுத்து கட்டிப்போட்டு 20 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

இதையடுத்து சென்னை முழுவதும் இருக்கக்கூடிய போலீசாருக்கு உசார் படுத்தப்பட்டு சம்பந்தபடுத்தப்பட்ட நபர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கொள்ளையர்களை கண்டுபிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள் கண்டுபிடித்து விடுவோம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்து வங்கியில் பணிபுரியும் வாட்ச்மேன் கூறியதாவது, என்னிடம் கூல்ட்ரிங்க்ஸ் எடுத்து வர சொன்னார். பின் எடுத்து வந்ததும் அதை குடிக்க சொன்னார். பாதி குடித்ததும் நான் மயங்கிவிட்டேன்.. பின்னர் சுரேஷையும், என்னையும் கட்டிப்போட்டு விட்டு துப்பாக்கி முனையில் கொள்ளையடித்து சென்றுவிட்டதாக தெரிவித்தார்.

இன்று வழக்கம்போல பணிக்கு வந்த முருகன் காவலாளிடம் கூல்ட்ரிங்க்ஸ் கேட்டிருக்கிறார்.. அவர் கொண்டு வந்ததும் அதில் மயக்க மருந்து கொடுத்து தனது நண்பர்கள் இருவரோடு சேர்ந்து கோடிக்கணக்கான மதிப்புடைய தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளார்..

 

 

 

Categories

Tech |