வாலிபரை அரிவாளால் வெட்டிய 3 பேரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுப்பிரமணியபுரம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மணிகண்டன் என்ற மகன் உள்ளார். இவர் டென்டல் மார்க்கெட்டிங் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டன் பக்கத்து வீட்டை சேர்ந்த ரமேஷ்குமார் என்பவரின் மனைவி மகாலட்சுமியிடம் பேசியுள்ளார். இதனை ரமேஷ்குமார் கண்டித்துள்ளார். இதனால் மணிகண்டனும், மகாலட்சுமியும் கடந்த 4 வருடங்களாக பேசாமல் இருந்துள்ளனர். இந்நிலையில் ரமேஷ்குமார் கோவில்பட்டிக்கு செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார்.
அப்போது மணிகண்டன் ரமேஷ்குமாரின் மனைவி மகாலெட்சுமியுடன் பேசினார். இதனை பார்த்து ஆத்திரமடைந்த ரமேஷ்குமார் மணிகண்டனை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும் ரமேஷ்குமாருக்கு ஆதரவாக இருந்த 2 சிறுவர்களும் இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டனை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ரமேஷ்குமார் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.