கடலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள கணேசபுரம் பகுதியில் சேதுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கிருஷ்ணகுமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணகுமார் தனது நண்பர்களுடன் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார். அப்போது குலசேகரப்பட்டினம் கடலில் கிருஷ்ணகுமார் நண்பர்களுடன் சேர்ந்து குளித்துள்ளார்.
இந்நிலையில் திடீரென எழுந்த பெரிய அலையில் கிருஷ்ணகுமார் இழுத்துச் செல்லப்பட்டு கடலில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த குலசேகரப்பட்டினம் கடலோர காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிருஷ்ணகுமாரின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.