ரோம் நகரில் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த நிலையில் அதிலிருந்து மீட்கப்பட்ட நபர் வங்கியில் கொள்ளையடிக்க சதி திட்டம் தீட்டியது தெரிய வந்திருக்கிறது.
இத்தாலி நாட்டின் தலைநகரான ரோமில் நேற்று முன்தினம் சுரங்க பாதை ஒன்று இடிந்து விழுந்தது. அதில் ஒரு நபர் மாட்டிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து காவல்துறையினரும், மீட்புக்குழுவினரும் சுமார் எட்டு மணி நேரங்களாக போராடி அந்த நபரை மீட்டர்கள்.
தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இந்நிலையில் அந்த நபர் வங்கியில் கொள்ளையடிக்க திட்டமிட்டு அந்த பகுதியியை தோண்டியது தெரிய வந்திருக்கிறது. அவருடன் இணைந்து மேலும் நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.