Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆர்டர்லி முறை ஒழிக்க முக்கிய நடவடிக்கை… டிஜிபி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு…!!!!!

தமிழக காவல்துறையில் காவலர் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டு அவர்கள் காவல்துறைகளில் பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அதிகாரிகளின் வீட்டில் ஆர்டர்லியாக  பணியமர்த்தப்பட்டு இருப்பதாக பல தினங்களாக புகார் வந்த வண்ணம் உள்ளது. உயர் அதிகாரிகளின் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர்களின் வீடுகளில் வேலைக்கு பயன்படுத்தி வருவது குற்றம் என்ற காரணத்தினால் உயர் அதிகாரிகளின் வீடுகளில் உள்ள ஆர்டலியாக உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என சென்னை காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டிருக்கிறது.

இந்த சூழலில் இது பற்றி டிஜிபி ஆர்டர்லி முறையை ஒழிப்பதற்கு வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கர் மற்றும் அரசு முத்திரையை தவறாக பயன்படுத்துவதை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் டிஜிபி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார். மேலும் இது பற்றி சென்னை ஹை கோர்ட் நேற்று கடுமையான விமர்சனங்களை வைத்திருந்த சூழலில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.

அந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் தேவையில்லாமல் அளவிற்கு அதிகமாக இருக்கக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திரும்ப அனுப்ப வேண்டும் எனவும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருக்கிறார். இந்த உத்தரவின் பெயரில் மாவட்ட எஸ்பி அளவில் இருந்து ஏடிஜிபி டிஜிபி வரையிலான அனைத்து காவல்துறை அதிகாரிகளின் வீடுகளில் அளவிற்கு அதிகமாக தேவை இல்லாமல் பணியாற்றக்கூடிய ஆர்டர்லிகளை உடனடியாக திருப்பி அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இந்த உத்தரவை சரியாக கடைபிடிக்காதவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |