தமிழகத்தில் முதல்முறையாக சுற்றுலாத் துறை மூலம் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். பட்டம் விடும் திருவிழா இன்று முதல் 15ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பத்து குழுக்கல் கலந்து கொண்டுள்ளனர். அதில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து நான்கு குழுக்களும், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆறு குழுக்களும் இந்த பட்டம் விடும் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர் சர்வதேச பட்டம் விடும் திருவிழாவில் பல்வேறு வடிவங்களில் ஏராளமான வண்ணங்களில் 100க்கும் மேற்பட்ட பட்டங்கள் பறக்க விடப்பட்டது. இந்த பட்டம் விடும் விழாவானது சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களை கவரும் விதத்தில் அமைந்துள்ளது.