Categories
மாநில செய்திகள்

இனிமேல் நாம தான் அறிவுஜீவிகள்….”1st இடத்துல இந்தியா இருக்குது”… மெர்சலாக்கும் உலக புள்ளி விவரம்…!!

செய்தியாளர்களிடம் பேசிய கவி பேரரசு வைரமுத்து, நானும் இந்தியன் தானே. நாடு உண்டாக்கியவர்களாக இருக்கும், கல்விக் கற்ற சமுதாயமும்  கல்வி கற்றுக் கொண்டிருக்கிற சமுதாயமும் தான்.  ஒரு மனித வளத்தை உண்டாக்கக்கூடிய சமுதாயமாக திகழ முடியும். இந்த நிறுவனத்தை நாங்கள் வாழ்த்துகிறோம். நண்பர் வேடியப்பன் அவர்களின் முயற்சியை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த நேரத்தில் தகைசால் தமிழர் என்று தமிழக அரசின் பெருவிருதை பெற்றிருக்கும் ஐயா நல்ல கண்ணு அவர்களை நாங்கள் போற்றுகிறோம், பாராட்டுகிறோம் அவரை வணங்குகிறோம் என்று சொல்ல வேண்டும். அவரை வாழ்த்துகிறோம் என்று சொல்வதை விட அவரை வணங்குகிறோம் என்று சொல்வதே சரியாக இருக்கும்.

ஐயா அவர்கள் இந்த புத்தக நிறுவனம் பற்றி சிறு கருத்துகளை சொல்வார்கள். நான் இந்த நேரத்திலே ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். வாசிக்கும் பழக்கம் குறைந்துவிட்டது என்று யாரும் அவலப்பட வேண்டாம். குறைந்துவிட்டதே என்று புலம்ப வேண்டாம். இல்லை வாசிக்கும் பழக்கம் வேறு வேறு வடிவங்களில் மிகுதியாகிக் கொண்டே போகிறது.இனி ஒரு மனிதன் வாசிக்காவிட்டால் நிகழ்காலத்தோடு இயங்க முடியாது.

அண்மையில் நான் ஒரு பத்திரிக்கை தகவலை படித்தேன். அது நமக்கெல்லாம் கழிப்பூட்டுகிற ஒரு புள்ளி விவரமாக இருப்பதை பார்த்து வியந்தேன். உதாரணமாக உலக நாடுகள் வாரத்தில் எத்தனை மணி நேரம் படிப்புக்கு செலவிடுகின்றன என்ற புள்ளி விவரம். அதில் ஆச்சரியம் ஜப்பான் வாரத்திற்கு 4.16 நிமிடங்கள் மட்டும்தான் செலவழிக்கிறது ஜப்பான். இங்கிலாந்து 5.18 மணி நேரம் வாசித்தலுக்கு செலவழிகிறது. அமெரிக்கா 5.48 மணி நேரம் வாசிப்புக்கு செலவிடுகிறது. சீனா 8 மணி நேரம். ஆனால் வியக்கத்தக்க செய்தி. மகிழத்தக்க செய்தி. இந்தியா வாரத்தில் வாசிப்புக்கு 10.4 மணி நேரம் செலவிட்டு உலகத்தில் வாசிப்பில் முன்னணியில் இருக்கிறது. என்ற செய்தியை நான் சொல்லிக் கொள்ள வேண்டும் இதை வளர்க்க வேண்டும். இப்போது ஐயா அவர்கள் சில கருத்துக்களை சொல்வார்கள்.

Categories

Tech |