அம்ரிஸ்டரிஸ் 1932ஆம் ஆண்டு பிறந்தவர் வாக்கர் ஹசன். 1952ஆம் ஆண்டு முதல் முறையாகப் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடியது. அதில் ஆடிய வீரர்களில் வாக்கர் ஹசனும் ஒருவர். அந்தத் தொடரில் ஆடிய வீரர்களில் வாக்கர் ஹசன் மட்டுமே உயிரோடு இருந்த நிலையில், தற்போது அவரும் நேற்று உயிரிழந்தார்.
இவர் பாகிஸ்தான் அணிக்காக 21 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,071 ரன்களை எடுத்துள்ளார். இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விடுத்துள்ள அறிக்கையில், ”பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்கு இது ஒரு சோகமான நாள். பாகிஸ்தான் கிரிக்கெட்டிற்காக விதை போட்டவர்களில் முக்கியமான கிரிக்கெட் வீரர் வாக்கர் ஹசன். அவர் மீது எப்போதும் பாகிஸ்தான் மரியாதை வைத்துள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹசன் 1982-83 இடைப்பட்ட ஆண்டில் பாகிஸ்தான் அணியின் தேசிய தேர்வுக் குழுத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.