மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி நேரடியாக உத்தரவிட்டார்.
கரூர் மாவட்டத்திலுள்ள அரவக்குறிச்சியில் ஜெயராமன்(20) என்பவர் வசித்து வருகிறார். இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு படித்த 17 வயது சிறுமியை ஜெயராமன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயராமனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கரூர் விரைவு நீதிமன்றம் ஜெயராமனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 2000 ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது.