மின்சாரம் தாக்கி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருபரப்பள்ளியில் ஒரு ஹோட்டல் அமைந்துள்ளது. இந்த ஹோட்டலில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ஜெயப்பிரகாஷ்(21) என்பவர் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜெயபிரகாஷ் ஹோட்டலின் தண்ணீர் தொட்டி மீது ஏறியுள்ளார். அப்போது நிலைதடுமாறிய ஜெயபிரகாஷ் அருகில் இருந்த மின் கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயபிரகாஷின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.