Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

போலீஸ் என கூறி வீட்டில் சோதனை…. பணத்தை அபேஸ் செய்த மர்மநபர்கள்…. காட்டிக்கொடுத்த கண்காணிப்பு கேமரா….!!

போலீஸ் என கூறி வீடு புகுந்து திருடிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள கணக்கம்பாளையம் பகுதியில் அபிராமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதா என்ற மகள் உள்ளார். இவர்கள் இருவரும் நெசவு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் இருவரும் வீட்டில் இருந்த போது வீட்டிற்குள் நுழைந்த 5 நபர்கள் தாங்கள் போலீஸ் என்றும், உங்களது வீட்டில் சோதனை செய்ய வேண்டும் எனக் கூறி வீட்டின் பீரோவில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இது குறித்து அபிராமி பெருமாநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவாகிருந்த வாகன எண் மூலம் திருச்சியை சேர்ந்தஅலெக்ஸ் என்ற சுப்பிரமணி, ஆரோக்கியராஜ், கருப்பன், மதுரையை சேர்ந்த மணிகண்டன், பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த சரவணகுமார் ஆகிய 5 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த பணத்தையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |