4 மாத குழந்தை திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மகேந்திரமங்கலம் பகுதியில் முனியப்பன்-சாமுண்டீஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பிறந்து 4 மாதம் ஆன ஆண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அந்த குழந்தையை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் அவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.