பெண்ணிற்கு பாலியல் தொல்லை அளிக்க வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த பெண் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை செய்தனர்.
அந்த விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவர் அந்த பெண்ணை காதலிப்பதாக ஆசிவார்த்தை கூறி பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்து அந்த பெண் உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் நேற்று முனிரத்தினத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.