Categories
தேசிய செய்திகள்

அடுத்த ஆண்டு தான் ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும்…. தகவல் வெளியிட்ட அறக்கட்டளை குழு….!!!!

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்ட கடந்த 2019 ஆம் வருடம் நவம்பர் 9ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. கட்டுமான பணிகளை கவனிக்க ராமஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் 5ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெற்றுள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பூமி பூஜையை நடத்தி வைத்துள்ளார். தற்போது கட்டுமான பணிகள் இரண்டு வருடங்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் அடுத்த வருடம் டிசம்பர் மாதத்திற்குள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி நிறைவடையும் என ஸ்ரீ ராமர் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா பொதுச் செயலாளர் சம்பத்ராய் கூறியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் இது பற்றி பேசும்போது 2023 ஆம் வருடம் டிசம்பர் மாதத்திற்குள் கட்டிடப் பணிகள் முடிக்கப்பட்டு கருவறையில் ராமரை பக்தர்கள் தரிசனம் செய்யும் விதமாக கோவில் தயாராகிவிடும். மேலும் கட்டுமான பணிகள் நல்ல வேகத்தில் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது கட்டுமான பணிகளில் இரும்பு பயன்படுத்தவில்லை. கோவிலின் வடிவமைப்பு மக்கள் வியந்து பார்க்கும் விதமாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |