Categories
மாநில செய்திகள்

பெரும் சோகம்….! பிரபல செய்தி வாசிப்பாளர் திடீர் மரணம்…. இரங்கல்….!!!!

அகில இந்திய வானொலி மூலமாக பிரபலமானவர் செய்தி வாசிப்பாளர் சரோஜா நாராயண சுவாமி. ஒலிபரப்புத் துறையில் அவர் செய்த ஒட்டுமொத்த பங்களிப்புக்காக 2008 ஆம் ஆண்டு அவருக்கு கலைமாமணி விருது வழங்கிய தமிழக அரசு கௌரவித்தது. தஞ்சை மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட சரோஜா நாராயணசாமி அகில இந்திய வானொலியின் முதல் தமிழ் செய்தி வாசிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒளிபரப்புத் துறையில் பெண்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர். 35 ஆண்டுகள் அவர் பணியில் இருந்தார். அது மட்டும் இல்லாமல் தமிழ் திரைப்படங்கள், ஆவண படங்கள், விளம்பரங்களுக்கும் இவர் குரல் கொடுத்துள்ளார். இந்திரா காந்தி உள்ளிட்ட சில பிரதமர்களிடம் பேட்டி எடுத்துள்ளார். இவர் வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். இவரின் மரணம் பெரும் இழப்பாகவே பார்க்கப்படுகிறது.

Categories

Tech |