செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழகத்தில் போதை அதிகரிப்பு என்று எங்கள் ஆட்சியில் இந்த மாதிரி இருந்ததா? நீங்கள் பத்திரிக்கை எடுத்து பாருங்கள்… இரும்பு கரம் கொண்டு அடக்கி ஒடுக்கினார் அம்மா… போதை பொருள் கடத்துபவர்கள், சட்ட ஒழுங்கை கையில் எடுப்பவர்கள், சட்டத்திற்கு புறம்பாக நடப்பவர்கள், கந்து வட்டி இப்படி எல்லாரையும் உள்ள தூக்கிப்போட்டு, சட்ட ஒழுங்கை பராமரித்து,
தமிழ்நாடு அமைதி பூங்கா என்று உருவாக்கி, இந்தியாவிலேயே அமைதி பூங்கா என்று சொல்லக்கூடிய மாநிலம் தமிழ்நாடு என்கின்ற வரலாற்றை புரட்சித்தலைவி அம்மா அவர்கள் உருவாக்கினார்கள். அப்போது இந்த பிரச்சனைகள் எல்லாம் இல்லை. ஆனால் இன்றைக்கு எங்கே பார்த்தாலும் கஞ்சா போதை, ஹெராயின் போன்ற பொருள் எல்லாம் சர்வ சாதாரணம்மாக கிடைக்கிறது என்றால், இந்த அரசு தூங்கிக் கொண்டிருக்கிறது.
காவல்துறையை இன்றைக்கு முழுமையாக செயல்பட விடவில்லை, காவல்துறையை முழுக்க முழுக்க ஏவல் துறையாக்கி, எதிர்க்கட்சியை பழிவாங்க வேண்டும், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் காவல்துறை செய்து கொண்டிருக்கிறார்களே ஒழிய…..நாட்டு மக்களுக்கு நல்லது செய்யவே செய்யனும் என்கின்ற எண்ணம் சுத்தமாக இந்த அரசாங்கத்திற்கு கிடையாது. இருப்பவர்களை பொறுத்து தான் காவல்துறை நடவடிக்கை எடுக்கும்,
எங்க கையில் இருக்கும் போது காவல்துறை சுதந்திரமாக செயல்பட விட்டோம், விளைவு என்னாச்சு ? அவர்கள் சுதந்திரமாக தன்னுடைய கடமையாற்றினார்கள், சட்ட ஒழுங்கை பராமரித்தார்கள். ஆனால் இன்றைக்கு காவல்துறை வெந்து போய், நொந்து போய், நொந்து நூடுல்ஸ் ஆகி போய்டுச்சு. ஸ்காட்லாந்துக்கு நிகராக சொல்லக் கூடிய தமிழக காவல்துறை இன்றைக்கு பரிதாப நிலைக்கு சென்று விட்டது என்பது தான் வருத்தத்தோடு சொல்கிறேன்.