Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் பிறந்த ஹரிணி… தவற விட்ட தமிழக அரசு… கூப்பிட்டு பாராட்டிய ஆளுநர்… அண்ணாமலை பேசும் அளவுக்கு என்ன நடந்துச்சு ?

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒரு ஒரு விஷயத்தை கூட பல இந்தியர்கள் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அரசியலுக்கு பேச எதுவும் இல்லாத அரசியல் தலைவர்கள்,  வீட்டில் தேசிய கொடியை ஏற்றுவதை கூட அரசியலாக்குகிறார்கள் என்றால்,  எந்த அளவிற்கு பிற்போக்குத்தனமாக அவருடைய சிந்தனை இருக்கிறது என்பதைத்தான் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முடைய மேதகு ஆளுநர் அவர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு மனிதர், பல கோடி மக்களுடைய அன்பைப் பெற்றவர், தமிழகத்தினுடைய நலனுக்காக எப்பொழுதும் குரல் கொடுத்தவர். நதிநீர் இணைக்க வேண்டும். அதன் மூலமாக தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும், காவிரி பிரச்சனையிலிருந்து தமிழகத்திற்காக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய,

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை நம்முடைய மேதகு ஆளுநர் அவர்கள் அழைத்து பேசியிருக்கின்றார். ஆளுநர் அவர்கள் பல மனிதர்களை பல இடங்களில் சந்திக்கின்றார். ஒரு ஆளுநருடைய கடமை அவர் பதவி வகிக்கக்கூடிய மாநிலத்தில் இருக்கக்கூடிய,  வித்தியாசமான மனிதர்கள், சாதனை செய்த மனிதர்கள், அனைத்து மனிதர்களையும் கூட சந்தித்து பேசுவது ஒரு மரபாக இருக்கிறது. அதுபோலத்தான் ஆளுநர் மாளிகைக்கு பலபேர் சென்றிருக்கின்றார்கள்.

போன வாரம் கூட ஆளுநருடைய முகநூல் பதிவை பார்த்தேன்.  தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவில் ஸ்பெல்பி சாம்பியன் வாங்குன  ஹரிணி என்கின்ற பெண்ணை ஆளுநர் அழைத்து விருந்து வைத்துள்ளார். இன்னும் தமிழ்நாடு அரசே ஹரிணிக்கு எந்தவிதமான பாராட்டு விழாவும் நடக்கவில்லை. இதுபோல் நிறைய நடக்கிறது. அதில் ரஜினி அவரை மட்டும் கூப்பிடல.

பல பேரை ஆளுநர் சந்திக்கிறார். அதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் ஒருவர். அதன் பின்பு ரஜினி அவர்கள் பத்திரிகையாளர்களிடம் பேசும்பொழுது,  ஆளுநரிடம் என்ன பேசினீர்கள் என்று கேட்டார்கள், நாம் எல்லோரும் பார்த்தோம்,  ஆளுநரிடம் அரசியல் பேசினேன் என்றார். இதில் என்ன தவறு ? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |