சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், திரைப்படத்தில் வந்து அரசியல் பேசக்கூடாது, பள்ளிக்கூடத்துக்கு போன அரசியல் பேசக்கூடாது, கல்லூரிக்கு போனா அரசியல் பேசக்கூடாது, அப்ப எங்க பேசலாம். கக்கூஸ்ல உக்காந்து பேசிட்டு இருக்கலாமா ? என்னைக்கு முடித்திருத்திற கடையிலும், தேனீர் கடையிலும் தயவுசெய்து அரசியல் பேசுங்கனு என்னைக்கு எழுதி வைக்கிறீங்களோ, அன்னைக்கு தான் இந்த நாடு உருப்படும்.
படிச்ச ஆசிரியர் பேசக்கூடாது, மாவட்ட ஆட்சியர் பேசக்கூடாது, உயர் காவல்துறை அதிகாரி பேசக்கூடாது, வங்கி பணியாளர் பேச கூடாது, மருத்துவர் பேசக்கூடாது, ஆனா இதெல்லாம் ஏற்கனவே பள்ளிக்கூடம் போகலானாலும் சரி, முதலமைச்சர் பேசலாம். படிக்கவே இல்லனாலும் சரி, அவன் அரசியல் பேசலாம்.அரசியல் என்பது ஒரு வாழ்வியல் என்பதை என்னைக்கு நீங்க புரிஞ்சுகிறீங்களோ அன்னைக்கு தான் இந்த நாடு மட்டும் உருப்பட போகுது.
அறிவியல், புவியியல் மாதிரி அரசியல் ஒரு வாழ்வியல். நீங்க பிறந்ததுல இருந்து இறந்தது வரைக்கும், பிறப்புச் சான்றிதழ், இறப்பு சான்றிதழ் பெறுகிற வரைக்கும் உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றையும் தீர்மானிப்பது அரசு. அந்த அரசை தீர்மானிப்பது அரசியல். இவரு ஏன் அரசியல் பேசுறாரு, இவரு ஏன் அரசியல் பேசுறாரு அப்படின்னு பேசுறவன் தான் ஆக மோசமான அரசியலை பேசுறான்.
திரைப்படத்தை விட ஒரு பெரிய அரசியல் இருக்காங்க. சினிமா என்கிறதே அரசியல் தாங்க. சினிமாவே அரசியல் தான். நீங்க பேசல, அதில இருந்து வந்தவங்க தான் இவ்வளவு பேரும். பேரறிஞ்சர் அண்ணா திரைப்படத்தின் கதை, வசனம். ஐயா கலைஞர் அவர்கள் தயாரித்திருக்கிறார், எழுதி இருக்காரு. அதுக்கு பிறகு ஐயா எம்ஜிஆர் அவர்கள், அம்மையார் ஜெயலலிதா அவர்கள், ஐயா விஜயகாந்த் அவர்கள், அண்ணன் கமலஹாசன் அவர்கள் எல்லாருமே என தெரிவித்தார்.