Categories
அரசியல் மாநில செய்திகள்

இரவோடு இரவாக கட்சியில் விலகல்… அமைச்சரிடம் நேரில் மன்னிப்பு… டோட்டலா குளோஸ் ஆன பாஜக…!!

நேற்று நள்ளிரவு 12மணிக்கு மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனை, அவரது இல்லத்தில் நேரடியாக சென்று சந்தித்த பின்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், நேற்று காலையில் நடந்த விஷயம்  பத்திரிகையாளர்கள், செய்தியாளர்களுக்கு தெரியும். நம்முடைய ராணுவ வீரர், நாட்டுக்காக உயிர் நீத்த தம்பி லட்சுமணன் அவர்கள்… புதுப்பட்டியை சேர்ந்தவர் …. வருடைய உடல்  ஏர்போர்ட்டுக்கு வந்தது. நாங்க எல்லோரும்  பாஜக சார்பாக சென்றோம். பாஜகவோட மாவட்ட தலைவராக இருப்பதால் நாங்கள் எங்களுடைய வீரவணக்கத்தை செலுத்துவதற்காக சென்றிருந்தோம்.

அமைச்சரின் தமிழை புரிஞ்சுக்க முடியல:

அப்போ அங்கு நடந்தது எல்லாருக்குமே தெரியும். அங்க அமைச்சர் வரும்போது என்ன தகுதி அடிப்படையில நீங்க வந்து இருக்கீங்கன்னு கேட்டாரு ?  அந்த நேரம் அதை நான் பர்சனலா எடுத்துக் கொண்டோம். அங்கே நானும், எங்க மாநிலத் தலைவர் அண்ணாமலை அவர்களும் அஞ்சலி செலுத்தி கொண்டிருக்கும்போது, விரும்பத்தகாத நிகழ்வுகள் வெளியே நடந்து விட்டது. வீட்டுக்கு போன பிறகு அது மன உறுத்தலாகவே இருந்தது. அது தொடர்பாக யோசித்துக் கொண்டு இருக்கும் போது, அமைச்சர் அவர்கள் வெளிநாட்டில படித்தவர்னால அவருடைய தமிழ்ல சரியான  அளவுக்கு புரிஞ்சுகிட முடியல.

நான் திராவிட குடும்பத்தை சார்ந்தவன்:

எந்த தகுதியின்னு கேக்குறது இங்க இருக்கக்கூடிய புரோட்டா கால்படி தமிழக அரசாங்கம் தான் ராணுவ வீரருடைய உடலை ரிசீவ் பண்ணுது. அப்போ நீங்க ஏர்போர்ட்டுக்கு  வெளியில அஞ்சலி செலுத்தலாம். வீட்ல போய் மரியாதை செலுத்தலாம். அந்த அர்த்தத்தில் அவர் சொல்கிறார்.இதனை அங்கே இருக்கக்கூடிய பாஜக தொண்டர்கள் எல்லாம், நான்  உட்பட அந்த நேரத்துல ஒரு தனி மனித தாக்குதலாகவே எடுத்துக் கொண்டோம். நான் சுயமரியாதை  இயக்கத்தில் இருந்து வந்தவன். என்னுடைய அப்பாவும், மொத்த குடும்பமே திராவிட குடும்பத்திலிருந்து வந்தவர்கள். நடுவுல உங்களுக்கு தெரியும் கடத்த ஒரு வருஷத்துக்கு முன்னாடி தான் நான் பிஜேபிக்கு வந்தேன்.

தூக்கமே வரல:

பிஜேபிஎல்லோருக்கும் தெரிந்ததுதான். எப்பயுமே சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு போக்கு நடந்து கொண்டே இருக்கும். அப்போ அதுவே  எனக்கு மன உளைச்சலா தான் இருந்துச்சு. அந்த மனா உளைச்சலோடு தான் அதுல பயணிச்சிக்கிட்டு இருந்தேன்.நிறைய இடங்களில் நான் அதைச் சொல்லி இருக்கிறேன். இப்போ ஆளுங்கட்சியை சார்ந்த அமைச்சர் ஒருத்தர் மேல் ஒரு தாக்குதல் என்பது ஒரு பெரிய மன உளைச்சல் தான். இப்ப மணி 12 மணி இருக்கும். எனக்கு தூக்கம் வரல.  யோசிச்சு பார்த்தேன்,

திமுக என் தாய் வீடு:

அடிக்கடி நான் வந்த வீடுதான் இது.தாய் வீடு தான். அமைச்சருக்கு  போன் பண்ணி கேட்டேன். முழிச்சிருந்தாங்கன்னா பாக்கணும்னு கேட்டேன். அவரு முழிச்சு தான் இருந்தாரு. அதனால வந்து என்னுடைய வருத்தத்தை அவர் கிட்ட தெரிவிச்சேன். மன்னிச்சுக்கோங்க காலையில் தெரியாமல் நடந்து போச்சு.முன்னாடி திமுகவில்  இருக்கும்போது அப்போ எம்எல்ஏவாக இருந்தால்  எனக்கு அங்கே வாய்ப்பு இருந்தது  வீரவணக்கம் செலுத்துவதற்கு… இன்னைக்கு வந்து சாதாரண ஒரு பொது ஜனம் தான். அந்த இடத்தில டாக்டரா இருக்கலாம். கட்சியில மாவட்ட தலைவரா இருக்கலாம்.

ரொம்ப வேதனையா இருக்கு:

நான் நேற்று அந்த இடத்துல இருந்திருக்கக் கூடாது. எங்களுக்கும்  அஞ்சலி செலுத்துவதற்கு அனுமதி கொடுத்தாங்க. அஞ்சலி செலுத்தினோம். புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன் எல்லோருமே அஞ்சலி செலுத்தினோம்.தொண்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒரு இடத்துல இப்படி நடந்துக்கிட்டது. பெரிய ஒரு வேதனையா தான் இருந்தது. இப்போ ஒரு சிலர் அரெஸ்ட் ஆகுற சூழல் வந்து இருக்கு. அந்த நேரத்துல ஒரு எமோஷனல்ல பண்ணிட்டாங்க என  அமைச்சரிடம் ஒரு விளக்கத்தை கொடுத்தேன்.அவரிடம் ரொம்ப கேஷுவல்லா தான் எடுத்துக் கொண்டார்.

சுயமரியாதையோடு வளர்ந்தேன்:

நாங்கள் ஆரம்பத்தில் இருந்து வளர்ந்த சுயமரியாதை என்பது, இந்த மாதிரி ஒரு அரசியல் இல்லை. துவேஷமான அரசியல் செய்வதற்கு நான் ஒரு ஆளாக இருக்கவும் கூடாது.  இப்ப மைண்ட் கொஞ்சம் ஃப்ரீயா இருக்கு,  இப்ப நிம்மதியா தூங்குவேன்னு நினைக்கிறேன்.எங்க கட்சியில் நான் இங்கே வந்ததை சொல்லவில்லை. எனக்கு தூக்கமே வரவில்லை.நேரடியாக வந்து அமைச்சரை சந்தித்து விடுவோம் . எந்த தகுதியின் அடிப்படையில் இங்கே வந்தீங்கன்னு எந்த அர்த்தத்துல சொன்னாருன்னு  கேட்ருவோம் என வந்தேன்.

மன்னிப்பு கேட்டேன்:

அண்ணன் அறிமுகமானவர் தானே. இந்த வீட்ல தானே நாங்க வளர்ந்து இருக்கிறோம்.  வருத்தம் இல்ல மன்னிப்பே கேட்க வந்தேன் என்று சொல்கின்றேன்.எங்க தொண்டர்கள் சார்பாக நடந்ததற்கு மன்னிப்பு கேட்க வந்தேன் நான்.எனக்கு பாஜகவில் பதவி என்ன பதவி ? இதுல மன அமைதி முக்கியம் இல்லையாநான் பாஜகவில் உறுதியாக தொடர மாட்டேன். மத அரசியல்,  இந்த வெறுப்பு அரசியல் என்பது எனக்கு பிடிக்கல.அதனால தான் வந்திருக்கிறேன். நான்  அமைச்சரிடம் வந்து இந்த வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்து வரல என என்னுடைய மனசுல இருக்கிறதை  அவரிடம் கொட்டியாச்சு,  அவ்வளவுதான்.

திமுக நான் வளர்த்த கட்சி:

திராவிட இயக்கம்  என்னுடைய தாய் வீடு தானே, பாஜகவில் தொடர போவதில்லை. காலையில் ராஜினாமா கடிதம் எழுதுவேன்.இப்ப வரைக்கும் எந்த முடிவும் எடுக்கல. சுயமரியாதையாக நாம் இருக்க வேண்டும்.  அதனால காலையில் கடிதம் எழுதுவது உறுதி.நான் திமுகவில் இணைந்தாலும் தப்பு இல்லை. இது என்னுடைய தாய் வீடு தானே. தப்பு இல்லல்ல. 10, 15 வருடமாக நான் இந்த கட்சிக்கு தான் உழைச்சேன். அதனாலதான் நான் வந்திருக்கிறேன்.

பாஜகவில் ராஜினாமா கடிதம்:

நான் டாக்டர் டாக்டர் தொழிலை பார்ப்பேன். மதுரையில நான் ஒரு டிரஸ்ட் வைத்திருக்கிறேன். மக்களுக்கான தொண்டு செஞ்சு கொண்டு இருக்கின்றேன். அடுத்த கட்ட நகர்வு பாப்போம். காலப்போக்கில் பார்ப்போம்.  உங்களுக்கு தெரியாம நிச்சயம் இருக்காது. பத்திரிக்கை நண்பர்களுக்கு தெரியாமல் செய்ய போறது இல்ல. திமுகவில் சேர்ந்தாலும் தப்பு இல்லைன்னு, சொல்றேன். அது தாய் என்னுடைய வீடு தானே.  காலைல ராஜினாமா கடிதத்தை அனுப்பப் போகிறேன், பாஜகவில் தொடர விருப்பமில்லை.

பாஜகவில் மத அரசியல்:

மத வெறுப்பு அரசியலால் தொடர்ச்சியாக ஏற்பட்ட மனவளைச்சல். ஏற்கனவே பாஜக கட்சியில விலகப் போற செய்தியை பார்த்திருப்பீங்க. பாஜகவில் இருக்கக்கூடிய மத அரசியல் என்பது ரொம்ப கடுமையாக இருக்கின்றது. நாம் எல்லாருக்குமான டாக்டரா இருக்கோம். எல்லோருக்கும் பொதுவான ஒரு மனிதனாக வாழ்ந்தாச்சு. அதனால மத துவேசத்தை என்னால் செய்ய முடியவில்லை. தாங்க முடியவில்லை வந்தாச்சு

Categories

Tech |