மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்பட உயர் அலுவலர்கள் தன்னை துன்புறுத்துவதாகக் கூறி வசந்த் என்னும் மருத்துவ அலுவலர் ஒருவர் மருத்துவ வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
காந்தி மருத்துவமனையில் பொது மருத்துவத் துறையில் பணியாற்றி வரும் வசந்த் என்னும் மருத்துவர் ஒருவர் தன்னை உயர் அலுவலர்கள் துன்புறுத்துவதாகக் கூறி தீக்குளிக்க முயன்றார். தன் பாக்கெட்டில் பெட்ரோல் பாட்டில்களை வைத்திருந்த மருத்துவர் வசந்த் அதை தன் மீது ஊற்றி கையில் வைத்திருந்த லைட்டரால் தன்னை கொழுத்திக்கொள்ள முற்பட்டார்.
இதையடுத்து நீண்ட நேரமாக வசந்துடன் பேச்சுவார்த்தை நடத்திய காவல் ஆய்வாளர் காந்தி ரெட்டி, அவரிடம் வைத்திருந்த லைட்டரை பறித்து தற்கொலைக்கு முயன்ற வசந்த்தை காப்பாற்றினார்.