புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடும் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவு சுற்று திரிகின்றன .அதனால் தெரு நாய் களை அப்புறப்படுத்த நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருப்பட்டினம் பெரிய மரக்கையார் வீதியில் அமைந்துள்ள அரசு நடுநிலைப்பள்ளிக்கு சென்று விட்டு திரும்பிய சிறுவனை மூன்று நாய்கள் கடிக்க துரத்தியுள்ளது. அப்போது சிறுவன் ஓடியதை கண்டு அருகில் இருந்தவர்கள் நாயை துரத்தி விட்டதால் சிறுவன் எந்த பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றப்பட்டான் .அந்த பதபதைக்க வைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.