Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக பாஜகவில் இருந்து விலகிய முக்கிய பிரபலம்….. திடீர் அறிவிப்பு….!!!!

மதுரை மாவட்ட பாஜக தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் தமிழ்நாடு நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் வீட்டிற்கு நேற்று நேரில் சென்று இருந்தார் . அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய இவர், எனக்கு வெறுப்பு அரசியல், மத அரசியல் ஒத்துவரவில்லை . என் மனதில் உள்ள விஷயத்தை அமைச்சரிடம் தெரிவித்தேன் .

நான் பாஜக கட்சியில் தொடரவில்லை . பாஜகவில் தொடரப்போவதில்லை . இன்று காலை ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன். நான் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் .திமுகவில் இணைவது குறித்து இதுவரை முடிவு எடுக்கவில்லை.திமுக தாய் வீடு தானே பத்து முதல் 15 ஆண்டுகளாக நான் உழைத்த கட்சியை திமுக என்று அவர் கூறியுள்ளார். ஏற்கனவே திமுகவில் இருந்த இவர் கடந்த ஆண்டு பாஜகவில் இணைந்த நிலையில் தற்போது மீண்டும் பாஜகவில் இருந்து விலகி இருப்பதால் திமுகவில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |