Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்குனு சரித்திரம் இருக்கு…. சோதனை எல்லாமே படிக்கட்டு தான்… எந்த கொம்பனாலும் முடியாது…!

தர்மபுரிக்கு சுற்றுப்பயணம் செய்த அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி,  சில துரோகிகள் நம்மோடு இருந்து கொண்டு, நம் வெற்றிக்கு தொந்தரவு ஏற்படுத்தி விட்டார்கள். அதனால் நம் ஆட்சிக்கு வர முடியாது நிலை ஏற்பட்டு விட்டது. இப்போது தெரிந்து கொண்டோம், யார் துரோகி என்பதை கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் தெரிந்து கொண்டார்கள்.

ஆகவே அப்படிப்பட்ட துரோகிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கைகோர்த்துக்கொண்டு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த நினைக்கின்றார்கள், உடைக்க நினைக்கின்றார்கள், ஒருபோதும் அதிமுகவை வீழ்த்த எந்த கொம்பனாலும் முடியாது.

எத்தனையோ முறை கழகத்திற்கு சோதனை வந்தது, அத்தனை சோதனைகளையும் படிக்கட்டாக மாற்றி வளர்ந்த சரித்திரம் தான் நிற்கின்றது. அதைப்போல எப்போதும் எங்களுக்கு ஏற்படுகின்ற இன்னல்கள், துன்பங்கள், துயரங்களை அத்தனையும் தூள் தூளாக்கி மீண்டும் அம்மாவுடைய அரசு அமைய பாடுபடுவோம்.

இப்போது ஆட்சியில் இருப்பவர் மக்களுக்கு நன்மை செய்யவில்லை, 2 ஆண்டு காலம் கடுமையான கொரோனா தொற்று பொருளாதாரம் இழந்து, வருமானம் இழந்து, வேலையில் இழந்து இருக்கின்ற நேரத்தில்  மின் கட்டணத்தை உயர்த்துவிட்டார்கள். இதனால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். அதேபோல நான் முதலமைச்சராக இருக்கின்றபோது விவசாயிகளின் கோரிக்கை ஏற்று,  மாண்புமிகு அமைச்சர்,  சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று  விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் முன்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று கூறினேன் என தெரிவித்தார்.

Categories

Tech |