உக்ரைன் நாட்டின் ஜபோரிஜியா என்ற அணுவின் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானதால் அப்பகுதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான மக்கள் அங்கிருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உக்ரைன் நாட்டில் ஜபோரிஜியா என்னும் அணுமின் நிலையத்தில் ரஷ்யா தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தகவல் வெளியானது. அதனைத்தொடர்ந்து அங்கிருந்து நூற்றுக்கணக்கான மக்கள் தப்பி சென்றனர் என்று நகர மேயர் டிமிட்ரோ ஓர்லோவ் கூறியிருக்கிறார்.
இதற்கிடையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நெருக்கமானவர் மற்றும் முன்னாள் அதிபர் டிமித்ரி மெத்வெதேவ், ஐரோப்பிய கண்டத்தின் அணுமின் நிலையங்கள் விபத்துக்களை எதிர்கொள்ளும் என மறைமுகமாக எச்சரித்திருக்கிறார்.
இது மட்டுமல்லாமல், அணுமின் நிலையப்பகுதிகளில் ரஷ்யப்படையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொள்கிறார்கள். எனினும், அதற்கு பதிலடி கொடுக்க முடியாத நிலை இருப்பதாக உக்ரைன் தரப்பினர் கூறியிருக்கின்றனர். இதனைத்தொடர்ந்து, அந்த அணுமின் நிலைய பகுதியை சுற்றி அமைந்திருந்த குடியிருப்புகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் பாதுகாப்பிற்காக அங்கிருந்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.