நாடு முழுவதும் வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி 75வது சுதந்திர தின பெருவிழா கொண்டாடப்பட உள்ளது. என் நிலையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவல் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.விருதுகள் பெறுவோர்களுக்கு 8 கிராம் தங்கப்பதக்கமும் 25 ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஐந்து காவல்துறை அதிகாரிகளுக்கு சிறந்த பொது சேவைக்கான முதலமைச்சரின் காவல் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை அடையாறு போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சிவராமனுக்கு சிறந்த பொது சேவைக்கான பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை போக்குவரத்து காவல் உதவியாளர் பழனி ஆண்டி, தாம்பரம் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் குமாருக்கும் இந்த பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் 10 பேருக்கு புலன் விசாரணைக்கான சிறப்பு பணி பதக்கங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.