விஷப்பூச்சி கடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை பகுதியில் கிட்டுச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மோட்டார் சைக்கிளில் டீ வியாபாரம் செய்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது கிட்டுச்சாமியின் இடது தொடையில் ஏதோ கடித்துள்ளது. இதுகுறித்து கிட்டுச்சாமி மனைவி ஈஸ்வரி மற்றும் மகன் பிரபுவிடம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திடீரென கிட்டுச்சாமிக்கு பூச்சி கடித்த இடத்தில் வலி அதிகமானதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி கிட்டுசாமி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.