பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள லாகூர் நகரில் இருந்து 18 பயணிகளுடன் பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ரகிம் யார் கான் மாவட்டத்தில் வந்து கொண்டிருந்த போது எதிர்திசையில் கரும்பு லோடு ஏற்றி வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 13 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் படுகாயத்துடன் உயிருக்கு போராடிய 5 பேரை மீட்டு மருத்துவமனையில் அங்கிருந்தவர்கள் சேர்த்தனர்.
இவர்களின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர். இதுகுறித்து அதிகாரி கூறியது, மழை பெய்ததால் சலை ஈராமாக இருந்துள்ளது எனவும் இதனால், பிரேக் பிடிக்கும் போது கட்டுப்பாட்டை இழந்து இந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியிருக்கலாம் என்று அவர்கள் தெரிவித்தனர். மேலும் விபத்து நடைபெற்றதும் டிரக்கின் ஓட்டுநர் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.