பொதுமக்களுக்கு தண்ணீரை பயன்படுத்துவதற்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளதோடு, தெற்கு மற்றும் கிழக்கு பகுதி முழுவதுமாக வறட்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வறட்சியின் காரணமாக நாட்டில் உள்ள பல்வேறு ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் போன்றவற்றில் நீரின் அளவு குறைந்துள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு தண்ணீரை பயன்படுத்துவதற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகபட்சமாக 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.