கன்னி ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மதியத்திற்கு மேல் மனக்கசப்பு கொஞ்சம் ஏற்படும். மற்றவர்களிடம் கொஞ்சம் நிதானமாகத்தான் நடந்துகொள்ளவேண்டும். தேவைக்கேற்ற பணம் இருக்கும்,பிரச்சனை இல்லை. இருப்பினும் தன விரையம் கொஞ்சம் ஏற்படும். கரைந்த சேமிப்புகளை ஈடுகட்ட என்ன செய்யலாம் என்று யோசனை செய்வீர்கள்.
பயணங்களை மாற்றி அமைப்பீர்கள். குடும்பத்தாருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கணவன், மனைவி இருவரும் மனம் விட்டு பேசுவது ரொம்ப நல்லது. எந்த பிரச்சினையும் பேசி தீர்த்துக்கொள்ளலாம். தயவுசெய்து பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில் பேசுங்கள், சிறப்பாக வாழுங்கள்,
குடும்ப விஷயங்களை அடுத்தவர்களிடம் கூறி ஆலோசனை கேட்பதை மட்டும் தயவு செய்து தவிர்க்கவேண்டும். மிக முக்கியமாக நீங்கள் ரகசியங்களை காப்பாற்றவேண்டும். குழந்தைகள் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது ரொம்ப நல்லது. நண்பரிடம் எந்தவித பிரச்சினையும் வேண்டாம்.
வாக்குவாதங்களும் வேண்டாம். யாருக்கும் இன்று பணம் கடன் கொடுக்க வேண்டாம். இன்று மாணவச் செல்வங்கள் நிதானமாக இருங்கள், படிப்பில் மட்டும் ஆர்வத்தை செலுத்துங்கள், படித்ததை எழுதிப் பாருங்கள். ஆசிரியர்களிடம் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், பச்சை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாக தான் இருக்கும். அது மட்டும் இல்லை இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்தும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்:பச்சை மற்றும் இளம் சிவப்பு நிறம்