ரஷ்யா உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் போரை தொடங்கியதில் இருந்து ரஷ்யா மீது அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகள் பல்வேறு விதமான பொருளாதார தடைகளை விதித்துள்ளது. ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணைய் வாங்குவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் கூறியுள்ளார். இந்நிலையில் கச்சா எண்ணெயை வாங்கி அதை எரிபொருளாக சுத்திகரித்து அமெரிக்கா உட்பட பல நாடுகளுக்கு இந்தியா அனுப்பி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இந்நிலையில் அமெரிக்கா ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்துள்ள சூழலில் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணையை வாங்கி அமெரிக்காவுக்கு கொண்டு வருவது பெரும் வேதனையை அளிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இதனையடுத்து ரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட கச்சா எண்ணையை கடல் வழியாக கொண்டு வந்து குஜராத்தில் உள்ள ஒரு துறைமுகத்தில் கப்பலை நிறுத்தி வைத்திருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. உலகத்திலேயே கச்சா எண்ணெய்யை அதிக அளவில் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டிருப்பதால் இந்தியா மிகக் குறைந்த விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்தும் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.