Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்… 200 கிலோ புகையிலை பொருள் பறிமுதல்…!!!!!!

சாணார்பட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்சன் தலைமையிலான போலீசார் அதிகாரிப்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி போலீசார் சோதனை மேற்கொண்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து ஆட்டோவில் இருந்து 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சிலுவத்துறை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணகுமார் மற்றும் ஆட்டோவில் பயணம் மேற்கொண்ட திண்டுக்கல்லை சேர்ந்த ராஜரத்தினம் அதிகாரி பட்டியைச் சேர்ந்த ஜேம்ஸ் போன்றோரை  போலீசார் கைது செய்துள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்திய ஆட்டோவும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |