Categories
சினிமா தமிழ் சினிமா

“சுதந்திர தினத்தையொட்டி வீடியோ வெளியிட்ட ரஜினி”…. கடுமையாக விளாசிய ப்ளூ சட்டை…!!!!!

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடியோ வெளியிட்ட ரஜினியை விளாசி ப்ளூ சட்டை மாறன் ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.

75 ஆவது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி எனக் கூறி ரஜினி வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, இந்த வருடம் நம்ம நாடு சுதந்திரம் பெற்று 75 ஆவது வருடமாகும். நம் நாட்டை வணங்கும் விதமாக நம் ஒற்றுமையை காட்டும் விதமாக நம் இந்திய நாடு சுதந்திர அடைவதற்கு எத்தனையோ வருடங்கள் பல லட்சம் பேர் எவ்வளவு சித்திரவதைகள், கொடுமைகளை அனுபவித்து இருக்கின்றார்கள்.

எத்தனையோ பேர் அவர்களின் உயிரையே தியாகம் செய்துள்ளார்கள். அந்த சுதந்திர தியாகிகளுக்கு, அந்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ஆகஸ்ட் 15ஆம் தேதி ஜாதி, மத, கட்சி வேறுபாடு இன்றி நாம் எல்லாரும் இந்தியர்கள் என்ற உணர்வோடு ஒரு இரண்டு அடி இல்லை மூன்று அடி கொம்பில் நம் தேசிய கொடியை கட்டி நம் வருங்கால சந்ததிகளான குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் கையால் நம் வீட்டிற்கு முன்பாக அந்த கொடியை பறக்கவிட்டு நாம் பெருமைப்படுத்தவும் நாம் எல்லோரும் இந்தியர்கள் என்று பெருமை கொள்வோம். ஜெய்ஹிந்த் என கூறியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனரும் விமர்சகருமான ப்ளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் யார் பெயரையும் குறிப்பிடாமல் கூறியுள்ளதாவது, மூன்று வர்ணங்கள்: கருப்பு பணம் பதுக்கிறவன். ரயிடுக்கு பயந்தவன். விருதுக்கு அலையறவன் என கூறியுள்ளார். இதை பார்த்த இணையதள வாசிகள் தேசிய கொடியை வீட்டில் ஏற்றச் சொன்ன ரஜினியைதான் மாறன் இப்படி விளாசி இருக்கின்றார் என கூறி வருகின்றார்கள். மேலும் தலைவரை விமர்ச்சிப்பது சரி இல்லை எனவும் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள் என ரஜினி ரசிகர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |