நாகர்கோவிலில் 4 பேர் உறவினரிடம் 70 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த நிலையில் அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பொதுப்பணித்துறை அலுவலக சாலை சிதம்பர நகர் சந்திப்பு பகுதியை சேர்ந்த பாரதி என்பவரிடம் உறவினர்களான சிவகார்த்திக், அம்பிகா, ராஜேஸ்வரி, சுடலைமுத்து உள்ளிட்ட நான்கு பேரும் புதிய தொழில் தொடங்குவதாக சிவகார்த்திக் கூறி கடனாக பணம் கேட்டதாக சொல்லப்படுகின்றது.
இதனால் பாரதி முதலில் 19,97,000 கொடுத்துள்ளார். பிறகு தனது வீட்டை நிதி நிறுவனத்தில் அடகு வைத்து 50,00,000 கொடுத்திருக்கின்றார். மொத்தமாக 69,97,000 கொடுத்த நிலையில் 4 பேரும் பணத்தை திரும்ப கொடுக்காமல் காசோலைகளை மட்டும் கொடுத்து மோசடி செய்ததோடு அவரை தகாத வார்த்தைகளால் மிரட்டியுள்ளனர்.
இதனால் பாரதி ஜுடிஷியல் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்திருக்கின்றார். மனுவை விசாரித்த நீதிமன்றம் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ்சாருக்கு உத்தரவிட்டது. இதன் பெயரில் போலீசார் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.