Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

கடகம் ராசிக்கு…விரோதிகள் விலகி செல்வார்கள்..பேசும் பொழுது நிதானத்தை கடைபிடியுங்கள்..!!

கடகம் ராசி அன்பர்களே, இன்று பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாளாகத்தான் இருக்கும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வார்கள். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். உத்தியோக மாற்றம் உறுதியாக கூடும். சந்தித்த நண்பர்களால் சந்தோஷச் செய்தி வந்து சேரும். இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் திடீர் கருத்து வேற்றுமை போன்றவை கூட வரும். நீங்கள் பேசும் பொழுது கொஞ்சம் நிதானமாகப் பேசுங்கள்.

முற்றிலும் வீண் வாக்குவாதங்களை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். குழந்தைகளின் முன்னேற்றத்தில் ஆர்வம் காட்டுவது ரொம்ப நல்லது. குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என்பதை கூர்ந்து கவனிக்கவேண்டும். நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் கூறும் கருத்துகளுக்கு எதிர்த்துப் பேசுவதை விட்டு, விட்டு நிதானமாக அவர்களின் கருத்துக்களை கேட்டு கொண்டு அதற்கு ஏற்றார் போல் செயல்படுவது ரொம்ப நல்லது.

இன்று  காதலில் உள்ளவர்களுக்கு காதலில் பயப்படக் கூடும். திருமண முயற்சி கூட ரொம்ப சிறப்பாக தான் நடக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தையும் நல்லபடியாக தான் முடியும். இன்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து பணவரவு வந்து சேரும். எந்தவித கவலையும் இன்று வேண்டாம். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள், அது போதும்.

இன்று மாணவ செல்வங்கள் கொஞ்சம் கஷ்டப்பட்டு பாடங்களைப் படியுங்கள், படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள். எழுதினால் நினைவில் வைத்துக்கொள்ள முடியும், எளிதாகவும் இருக்கும். அதேபோல ஆசிரியர்களிடம் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். சக மாணவர்களிடமும் கொஞ்சம் கனிவாக நடந்து கொள்ளுங்கள்.

இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு எப்பொழுதுமே உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாக தான் நடக்கும்.

அதிஷ்டமான திசை: தெற்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 6

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் சிவப்பு நிறம்

Categories

Tech |