Categories
மாநில செய்திகள்

திமுகவுக்கு தொடர்ந்து டிமிக்கி கொடுத்த பிரியா….. மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மேயர்….. தீயாய் பரவும் செய்தி…..!!!!

சென்னை மாநகரில் முதல் பெண் மேயர் என்று பெருமைக்கு உரியவர் பிரியா. இவர் திமுக பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதில் அமைச்சர் சேகர்பாபு சிபாரிசின் பேரில் சென்னை மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை மேயராக பிரியா பதவி ஏற்ற நாள் முதல் சர்ச்சைகளும் இவரை பின்தொடர்ந்தபடியே தான் உள்ளது. அதாவது சென்னை மேயராக பிரியா பதவியேற்ற போது பிரியா கிறிஸ்தவர் என ஒரு பாரதியார் வாழ்த்து கூறியதால் பிரச்சனை வெடித்தது. இதனையடுத்து சென்னை மேயர் பதவி பொறுத்தவரை இந்து மதத்தை சேர்ந்த பட்டியல் சமூகத்துக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் திமுகவின் தேர்வு செல்லாது என்று பல்வேறு இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கியது. இதனை சுதாகரித்து கொண்ட பிரியா மேயர் உடனே “நான் ஒரு இந்து தான்” என்று கூறியதோடு கோவில் கோயிலாக சென்று சாமி தரிசனம் செய்து சர்ச்சைகளுக்கு அதிரடி முற்றுப்புள்ளி வைத்தார்.

அதோடு நிறுத்திக் கொள்ளாமல் தன்னுடைய நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டுகளை வைப்பதே பழக்கமாகக் கொண்டு இருந்த அவர் குங்குமம் வைக்க தொடங்கினார். இந்த சர்ச்சைகள் கிளம்பியது. அதனை தொடர்ந்து அம்மா உணவகங்கள் பற்றி மிகப்பெரிய திருவாய் மலர்ந்து மீண்டும் திமுக மேலிடத்தில் கோபத்திற்கு ஆளாகி போனார். அதாவது சென்னையில் பல இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படாமல் மூடி கிடப்பாக செய்தியாளர்களிடம் போட்டு உடைத்ததால், போராட காரணமின்றி தவித்த அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு மேயர் பிரியா தீனி போட்டதாகவே அமைந்தது. இதனால் டென்ஷனான திமுக மேலிடம் செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்குமாறு சென்னை மேயர் பிரியாவுக்கு திடீர் உத்தரவு போட்டதாகவும் அதனால்தான் மேயர் பிரியா சமிப காலமாக செய்தியாளர்களிடம் அதிகமாக சந்திப்பது இல்லை என்று பரவலாக பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் சென்னை மேயர் பிரியா ஒரு பரபரப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது செய்தியாளர்கள் சந்திப்புகளை தவிர்க்குமாறு திமுக அறிவுறுத்தி வந்தது. ஆனால் சென்னை மேயர் பிரியா சமீப காலமாகவே விளம்பரங்களுக்கு அதிகமாக முக்கியத்துவம் தருவதாகவும், அவரை பற்றி நாள்தோறும் செய்திகள் போடுவதற்காக முன்னணி யூ டியூப் நிறுவனங்களோடு பிரியா இணைந்து செயல்படுவதாகவும் க்குற்றசாட்டுகள் எழுந்துள்ளது. இதையெல்லாம் அறிந்த திமுக தலைமை சென்னை மேயர் பதவிக்கு பிரியாவை சிபாரிசு செய்த அந்த முக்கியமான அமைச்சரை அழைத்து பக்குவமாக எடுத்துக் கூறி கண்டித்து வைக்குமாறு கட்டளை பிறப்பிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் திமுக மேலிடத்தில் கோபத்துக்கு ஆளாகி இருப்பது அறிந்து கொண்ட சென்னை மேயர் பிரியா அதிர்ந்து போய் கிடப்பதோடு அடக்கி வாசித்து வருவதாகவும் ரிப்பன் மாளிகை வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

Categories

Tech |