இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பும், அவரது மனைவி மெலனியா ட்ரம்ப்பும் பிப்ரவரி 24, 25 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இந்தப் பயணித்தின் போது, தலைநகர் டெல்லிக்கும், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகருக்கும் செல்ல உள்ளனர். மகாத்மா காந்தின் வாழ்க்கையில் அகமதாபாத் மிக முக்கியப் பகுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயணம் அமெரிக்கா-இந்தியா இடையேயான வியூக ஒத்துழைப்பையும், இருநாட்டு மக்களின் நல்லுறைவை பறைசாற்றும் விதமாகவும் அமையும்” எனக் கூறுப்பட்டுள்ளது. அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் சந்து அந்நாட்டு அதிபர் ட்ர்மப்பை நேரில் சந்தித்துப் பேசிய நிலையில், ட்ரம்ப்பின் இந்தியப் பயணம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, சுமார் 1.867 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இந்தியாவுக்கு ஏவுகணை விற்பனை செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார் என அந்நாட்டு பாதுகாப்பு, ஒத்துழைப்பு முகமையும் தெரிவித்துள்ளது. அதிபர் ட்ரம்ப்பின் வருகையையொட்டி அந்நாட்டு அலுவலர்களுடன் இந்தியா தொடர்பில் உள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.