Categories
சினிமா

உங்களின் திருமணம் எப்போது?….. அதிரடி பதில் அளித்த அம்மு அபிராமி….!!!!

தமிழ் சினிமாவில் பைரவா படத்தின் மூலம் அறிமுகமானவர் அம்மு அபிராமி. இவர் தொடர்ந்து நடித்த ராட்சசன், அசுரன் போன்ற படங்கள் மிகப் பெரிய வெற்றி அடைந்தது. இதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்க்கப்பட்டது. அதன் பிறகு என் ஆளோடு செருப்ப காணோம், தீரன் அதிகாரம் ஒன்று, துப்பாக்கி முனை உள்ளிட்ட மேலும் பல படங்களை நடித்திருக்கிறார். தற்போது 6 புதிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமூகவலைதளத்தில் அம்மு அபிராமிடம் உங்களுக்கு திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலர் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், “எனது திருமணம் குறித்த நிறைய கேள்விகள் வந்துள்ளது. எனக்கு 22 வயது ஆகிறது. திருமணம் செய்து கொள்வதை விட எனது வாழ்க்கையில் நிறைவேற்ற பல கனவுகள் உள்ளது. எனவே திருமணத்திற்கு இது சரியான நேரம் என்று நினைக்கும் போது திருமணம் செய்து கொள்வேன்” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |