இந்தியாவில் வருடம் தோறும் ஆகஸ்ட் 15ஆம் தேதி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவது நடைபெற்று வருகின்றது. மாநிலங்களைப் பொறுத்தவரை 1973 ஆம் வருடம் வரை குடியரசு தினம் சுதந்திர தினம் போன்ற நாட்களில் கவர்னர்கள் மட்டுமே கொடி ஏற்றியது வழக்கமாக இருந்து வந்தது. இந்த சூழலில் முன்னாள் முதல்வர் கருணாநிதி கோரிக்கையை ஏற்று மாநில முதலமைச்சர்கள் சுதந்திர தினம் அன்று கவர்னர்கள் குடியரசு தினம் அன்று கொடியேற்றம் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.
இதனை அடுத்து கடந்த 1974 ஆம் வருடம் முதலமைச்சராக இருந்த கருணாநிதி முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றியுள்ளார். முதல்வராக ஆட்சியில் இருந்த சமயத்தில் கருணாநிதி 14 முறை, எம்ஜிஆர் 11 முறை, ஜெயலலிதா 16 முறை, எடப்பாடி பழனிச்சாமி 4 முறை தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். இந்த வரிசையில் நாளை ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் முதன்முறையாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்ற இருக்கின்றார். இந்தியா தனது 25வது சுதந்திர விழாவை கொண்டாடிய போது கருணாநிதி தேசியக்கொடி ஏற்றி வைத்து திமுகவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
தற்போது 75வது சுதந்திர தினத்தின் போது முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றும் வாய்ப்பை பெற்றிருப்பதாக திமுக பெருமையாக கருதுகின்றது. இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைக்கும் மறுநாள் ஆகஸ்ட் 16ஆம் தேதி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார். அப்போது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இந்த சந்திப்பின் போது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின் தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்து வைத்திருப்பதாக கூறப்படுகின்றது.
மேலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் அழிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் அழிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலினுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகின்ற நிலையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பாஜகவினர் செருப்பு வீசி சம்பவத்தை பிரதமரிடம் நேரில் முதல்வர் ஸ்டாலின் முறையிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் பாஜக தலைவர் அண்ணாமலை பீதியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.