Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“மூதாட்டியை தாக்கி நகையை பறித்துச் சென்ற வாலிபர்”…. கைது செய்த போலீசார்….!!!!!

மூதாட்டியை தாக்கி நகையை பறித்து சென்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பில்லம்மா என்கின்ற மூதாட்டி தனியாக வசித்து வருகின்றார். நேற்று முன்தினம் அங்கு வந்த வாலிபர் ஒருவர் மூதாட்டியை கட்டையால் தலையில் அடித்து விட்டு அவர் காதில் அணிந்திருந்த ஒரு பவுன் தங்க கமலை பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். பின் மூதாட்டியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து, மூதாட்டியை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்கள்.

இதை அடுத்து மூதாட்டியின் மகள் அக்கையம்மா காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்தார், இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தான் மூதாட்டியை தாக்கி கம்மலை பறித்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கம்மலை பறிமுதல் செய்தார்கள்.

Categories

Tech |