மேஷம் ராசி அன்பர்களே, இன்று பிரிந்து சென்றவர்கள் பிரியமுடன் வந்து இணையும் நாளாகவே இருக்கும், சுபச்செலவுகள் கொஞ்சம் இருக்கும். உத்தியோக நலன் கருதி பயணமொன்றை மேற்கொள்கிவீர்கள். வாக்குவாதம் செய்பவர்கள் மனம் மாறுவார்கள். பஞ்சாயத்துகள் அனைத்துமே சாதகமாகவே இருக்கும். இன்று ஒரு நல்ல குறிக்கோளுக்காக நீங்கள் பாடுபடுவீர்கள்.
புண்ணிய காரியங்கள் செய்வீர்கள். பயணங்கள் செல்ல வேண்டியிருக்கும், ஆடம்பர பொருட்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கொஞ்சம் கூடும். கொடுத்த வாக்கை காப்பாற்றும் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். அடுத்தவரை பற்றி எந்த ஒரு பேச்சையும் பேசாமல் இருப்பது ரொம்ப நல்லது.
இன்று மாணவ செல்வங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் கல்வியில் மட்டும் ஆர்வத்தை செலுத்துவது ரொம்ப நல்லது. கவனமாக பாடங்களைப் படியுங்கள் அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு சிறப்பு வாய்ந்த நிறமாகவே இருக்கும்.
அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்