Categories
தேசிய செய்திகள்

“ஒரே நாடு, ஒரே நுழைவுத்தேர்வு” மத்திய அரசின் புதிய அறிவிப்பு…. அதிர்ச்சியில் மாணவர்கள்….!!!!

மத்திய அரசின் புதிய அறிவிப்பால் மாணவர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இந்தியாவில் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு நீட் தேர்வும், என்.ஐ.டி, ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி போன்ற தொழில்நுட்ப படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு JEE நுழைவுத் தேர்வும், பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு கியூட் என்ற நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த மூன்று நுழைவு தேர்வுகளையும் தற்போது ஒரே நுழைவுத் தேர்வாக நடத்துவதற்கு மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. அதாவது தேசிய கல்விக் கொள்கை திட்டத்தின் கீழ் ஒரே நாடு, ஒரே நுழைவுத் தேர்வு என்ற அம்சத்தை செயல்படுத்த இருக்கிறது. இந்நிலையில் நீட் தேர்வில் உயிரியல், இயற்பியல், உயிரியல் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.

இதனையடுத்து JEE நுழைவுத் தேர்வில் வேதியல், இயற்பியல் மற்றும் கணிதம் போன்ற பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதேபோன்று கியூட் நுழைவு தேர்வில் நீட் மற்றும் JEE நுழைவுத் தேர்வுகளில் கேட்கப்படும் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். இதன் காரணமாக மூன்று தேர்வுகளையும் ஒரே தேர்வாக மாற்றுவதில் எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக கல்வி அமைச்சகம் பல்கலைக்கழகம் மானிய குழு உட்பட பல்வேறு தரப்பிலிருந்து ஆலோசனைகளை கேட்டு வருகிறது. இந்த தகவலை பல்கலைக்கழக மானிய குழு தலைவர் எம். ஜெகதீஷ் குமார் கூறியுள்ளார்.

Categories

Tech |