விவசாயியை அரிவாளால் வெட்டிய நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விவசாயியான பரமசிவம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த கர்ணன் என்பவருக்கும் இடையே நில பிரச்சினை காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2010 -ஆம் ஆண்டு கர்ணன் பரமசிவத்தை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்து பரமசிவம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கர்ணனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கர்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.