Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

மரத்தின் மீது மோதிய ஆம்புலன்ஸ்…. காயமடைந்த 2 பேர்…. விழுப்புரத்தில் கோர விபத்து…!!

ஆம்புலன்ஸ் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆதிவராகநல்லூர் பகுதியில் பாலமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் வெடி விபத்தில் பாலமுருகனுக்கு காயம் ஏற்பட்டு சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை அடுத்து மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ்சில் பாலமுருகனை உறவினர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த ஆம்புலன்ஸை பாலசுப்பிரமணியன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கோனேரிகுப்பம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆம்புலன்ஸில் இருந்த துளசிராமன், நாகவல்லி ஆகியோர் காயமடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து பாலமுருகன் வேறொரு ஆம்புலன்ஸில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |