சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தாய்மாமா மற்றும் தாத்தா ஆகிய 2 பேரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் வசிக்கும் தம்பதியினருக்கு 5 வயதுடைய பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சிறுமியின் தந்தை அவரை விட்டு சென்றுவிட்டார். அடுத்த சில நாட்களில் தாயும் எங்கேயோ காணாமல் போய்விட்டார். இதனால் தாய்மாமா சரவணன்(48) என்பவர் சிறுமியை பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தினமும் சிறுமி அலறி துடிக்கும் சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் சிறுமியிடம் விசாரித்தனர். அப்போது தன்னை கொடுமைப்படுத்துவதாக சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விருதுநகர் ஸ்டைல் லைன் அமைப்பினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்படி குழந்தைகள் நல ஒருங்கிணைப்பாளர் பொருட்செல்வி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது சிறுமியின் இடுப்புக்கு கீழே பல இடங்களில் தீக்காயம் இருந்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் தாய்மாமா சரவணன், தாத்தா பெரியண்ணன்(72) என்பவரும் இணைந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். மேலும் சூடு வைத்து சிறுமியை கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் சரவணன் மற்றும் பெரியண்ணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.