தென்னை நார் தொழிற்சாலையில் பற்றி எரிந்த தீயை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஓநாய் கூட்டம் மலைக்கு எதிரே மகாராஜபுரத்தை சேர்ந்த பாதுஷா என்பவர் தேங்காய் நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். நேற்று மாலை தேங்காய் நார் கழிவுகளில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நீண்ட நேரம் போராட்டத்திற்க்கு பிறகு தென்னை நாரில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை. இது குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.