கார்த்தியின் விருமன் திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று இருக்கிறது. கடந்த 2015 ஆம் வருடம் வெளியான கொம்பன் படத்திற்கு பின் தற்போது ஆறு வருடங்கள் கழித்து விருமன் படத்தின் மூலம் கார்த்தி முத்தையா இருவரும் இணைந்திருக்கின்றார்கள். சுல்தான் பலத்திற்கு பிறகு வெளியாகும் கார்த்தி படம் என்ற காரணத்தினால் விருமன் படத்திற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இந்த படத்தில் ராஜ்கிரன், பிரகாஷ்ராஜ், சூரி மற்றும் பல நடிக்கின்றார்கள். கொம்பன் படம் போலவே இந்த படமும் கிராமத்து பின்னணியில் குடும்ப செண்டிமெண்ட் உடன் ஆக்சன் படமாக உருவாகி இருக்கின்றது.
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விருமன் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி. இந்த சூழலில் ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் இந்த படம் அமோக வரவேற்பினை பெற்றுள்ளது. கார்த்தி சினிமா கெரியரில் விருமன் படத்திற்கு தான் மிகப்பெரிய ஓபனிங் கிடைத்திருப்பதாக குறிப்பிடுகின்றது. இந்த நிலையில் விருமன் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி இந்த படம் நேற்று மற்றும் 7.23 கோடி வசூலித்துள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன. இதன் மூலமாக கார்த்தியின் கெரியரில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்னும் சாதனையை விரும்பும் படம் படித்திருக்கிறது. இதற்கு முன் சுல்தான் படம் 5 கோடி வசூலித்தது சாதனையாக இருந்த நிலையில் தற்போது விருமன் படம் அதனை முறியடித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.