இந்தியாவில் 75 ஆவது சுதந்திர தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது சுதந்திர தின விழா சலுகை ஆக வாடிக்கையாளர்களுக்கு 75 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படுகின்றது. இது வருடாந்திர திட்டமாகும். இதன் விலை 2999 ரூபாய் மட்டுமே.
இந்தத் திட்டத்தின் கீழ் தினமும் 2.5 ஜிபி டேட்டா இலவசமாக பெறலாம். அதாவது வாடிக்கையாளர்களுக்கு மொத்தமாக 912.5 ஜிபி டேட்டா கிடைக்கின்றது. அதுமட்டுமல்லாமல் நாள் ஒன்றுக்கு நூறு எஸ் எம் எஸ் இலவசம். அன்லிமிடெட் வாய்ஸ் கால் பேசிக்கொள்ள முடியும். டிஸ்னி பிரஸ் ஹாட் ஸ்டார் சேனலை சப்ஸ்கிரிப்சன் செய்வதும் இதிலேயே வந்து விடுகின்றது. இதன் மதிப்பு 499 ரூபாய் மட்டுமே. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 75 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கும் சலுகையை வாடிக்கையாளர்கள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.