கர்நாடக மாநிலத்தில் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த சிவகுமார்(32) மற்றும் சைத்ரா(28) தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணமான ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் நான் செல்ல செல்ல சண்டையும் ஆரம்பித்துள்ளது. அதனால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியாத சைத்ரா இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளார். அது மட்டுமல்லாமல் கணவர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனைவியுடன் பேசுவதாக கூறி தனியாக அழைத்துச் சென்ற சிவகுமார் திடீரென கத்தியை எடுத்து கழுத்தை அறுத்துள்ளார். அதன் பிறகு தப்பியோட முயன்ற போது அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அவரை பிடித்து கைது செய்தனர். விவாகரத்து கேட்டதால் மனைவியை கணவன் கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.